தேர்தல் வரை நரகத்தின் இடைவேளை

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சினை சம்பந்தமான கதைகளை உருவாக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதை அரசாங்கம் போகும் வழி சரியானதல்ல. இது நாடாளுமன்றத் தேர்தல் வரையான நரகத்தின் இடைவேளை. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்குகின்றனர்.

யமன் தூங்குகிறார். யமன் சிறிய இடைவேளை வழங்கியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் மக்கள் மீது சுமையை ஏற்றி, எம்.சீ.சீ உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்கள்.

கொரோனா வைரஸ் காரணமாக முழு ஆசிய கண்டத்தின் பொருளாதாரமும் இறுகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குவதில்லை. நாடாளுமன்றத்தில் இவை பற்றி விவாதங்கள் இல்லை. நாட்டில் இவை பேசப்படுவதில்லை.

வேறு விடயங்களை பற்றி பேசுகின்றனர். ஊடகங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் மோதல் பற்றி பேசுகின்றன. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதே மக்களுக்கு இருக்கும் பிரச்சினை. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சினை மக்களுக்குரியதல்ல.

ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதிகளை நிர்மாணிக்க உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. அதற்கான பணம் எங்கே இருக்கின்றது. ஒரு லட்சம் தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக கூறுகிறது. இவற்றுக்கு எங்க பணம் இருக்கின்றது எனவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.