கடன் பெறும் வரையறையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த ஆண்டு செலுத்தப்படாத கட்டணங்களை செலுத்த தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் கடன் பெறும் வரையறையை மேலும் 35 ஆயிரத்து 300 கோடியாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குறை நிரப்பு சட்டமூலத்தில் திருத்தங்களை செய்யும் யோசனையை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க சட்டமா அதிபரின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் 73 ஆயிரத்து 500 கோடியாக இருக்கும் அரசாங்கம் கடன் பெறும் வரையறை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 800 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது.

இந்த திருத்த யோசனை நாடாளுமன்றத்தின் கூட்டம் முடிவடையும் முன்னர் அடுத்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட உள்ளது.