எரிபொருளின் விலை குறைந்தால் அதன் நன்மைகளை நாட்டு மக்களுக்கு வழங்குவோம்! மகிந்த அமரவீர

Report Print Steephen Steephen in அரசியல்

உலக சந்தையில் தற்போது கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதுடன் அது இலங்கையில் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கு போதுமானதல்ல என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. தொடர்ந்தும் விலை குறைந்தால் அதன் பலனை நாட்டு மக்களுக்கு வழங்குவோம்.

சில வாரங்களுக்கு முன்னர் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்த போது இலங்கையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்கும் தேவை இருந்த போதிலும் அரசாங்கம் அதனை செய்யவில்லை.

தற்போது கச்சா எண்ணெய் விலை நிரந்தரமாக குறையவில்லை. இது குறுகிய கால நிலைமை மாத்திரமே எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாத காலத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 20 வீதத்திற்கும் குறைந்தது.