பிரதமரை விரைவில் சந்திக்க தயாராகும் சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள்

Report Print Ajith Ajith in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளனர்.

பொதுத்தேர்தல் ஆசன ஒதுக்கீடு தொடர்பில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனும் சந்திப்பு நடத்தப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதன்பின்னரே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஸ்ரீலங்கா பொது பெரமுனவுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பதை தீர்மானிக்கும் என்று தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொதுஜன பெரமுனவுக்கே ஆதரவளித்தது. இதன்போது பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு 33 வீத ஆசன ஒதுக்கீடு செய்வதாக உறுதியளிக்கப்பட்டது.

எனினும் தற்போது அதனை உறுதிப்படுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயங்குவதை அடுத்து இரண்டுகட்சிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால தமது கட்சியில் இணைந்து போட்டியிடுவதை பொதுஜன பெரமுனவின் பல உறுப்பினர்கள் எதிர்த்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.