அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என அறிவிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

அடுத்த மாதம் எரிபொருள் விலையில் மீளாய்வை மேற்கொள்ள அரசாங்கம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

உலக சந்தையில் தற்போது எரிபொருட்களின் விலை குறைந்துள்ள நிலையிலேயே இலங்கையிலும் எரிபொருட்களின் விலை மீளாய்வு செய்யப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் செஹான்சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்தில் இருந்தே எரிபொருளின் விலை உலக சந்தையில் குறைந்துள்ளது. இது நீடித்தால் அதன் நன்மையை பொதுமக்களுக்கு வழங்கமுடியும் என்று சேமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக உலக சந்தையில் எரிபொருட்கள் விலை உயர்வு பெற்றிருந்தபோதும் அரசாங்கம் விலையை அதிகரிக்காமல் அதே விலையிலேயே எரிபொருளை விநியோகித்து வந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாகவே தற்போது எரிபொருளின் விலையில் குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் ராஜாங்க அமைச்சர் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.