ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த அமைச்சர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Tamilini in அரசியல்

அரச அதிகாரிகளுடன் செயற்படும் போது அவர்களுக்கான கௌரவத்தையும் தொழிலுக்கான கௌரவத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அமைச்சர்களுக்கு இதனை அறிவித்துள்ளனர்.

அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் அமைச்சர்களுக்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் எச்சரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அமைச்சர்கள் ஏதேனும் கலந்துரையாடலில் கலந்துக் கொள்வதற்கு முன்னர் அதற்கான விடயங்கள் தொடர்பில் முழுமையான ஆயத்தங்களையும் விழிப்புணர்வுகளை பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட நோக்கங்களை தள்ளி வைத்து விட்டு தேசிய நோக்கத்திற்காக முன் வரும் அரச அதிகாரிகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்நிற்க வேண்டும் என ஜனாதிபதி அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.