ஜெனிவாவில் இலங்கை இம்முறை தப்பமுடியாது! ஐ.நா. உறுப்பு நாடுகள் கிடுக்குப்பிடி! சுமந்திரன் விளக்கம்

Report Print Rakesh in அரசியல்

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் அங்கு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கை விவகாரம் தொடர்பில் பல தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தி வருகின்றார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலர்களுடனும், உறுப்பு நாடுகளினதும் தொடர் சந்திப்புக்களை நடத்தி வரும் சுமந்திரன் எம்.பி., அங்கு நடைபெறும் கூட்டங்களிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை எடுத்துரைத்து வருகின்றார்.

ஐ.நா. தீர்மானத்திலிருந்து இலங்கை அரசு விலக முடியாது என்றும், அதை இம்முறை நடைபெறும் கூட்டத் தொடரில் இலங்கை அரசிடம் ஐ.நா. உறுப்பு நாடுகள் இடித்துரைக்கும் என்றும் சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

ஜெனிவாவில் நின்றவாறு அங்கு நடைபெறும் சந்திப்புக்கள் தொடர்பில் சுமந்திரன் எம்.பி. தெரிவித்த தகவல்களை இங்கே காணலாம்,