நாட்டுக்குள் நுழைய தடைவிதித்தது அமெரிக்கா! இராணுவ தளபதி கூறியுள்ள தகவல்

Report Print Murali Murali in அரசியல்

தாம் அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, அல்லது விண்ணப்பிக்க போவதோ கிடையாது என இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷாவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவர் உட்பட அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு அமெரிக்காவிற்குள் வர அந்நாட்டு இராஜாங்க செயலகம் இன்று தடை விதித்திருக்கிறது.

லெப்டினன்ட் ஜெனரல் ஷாவேந்திர சில்வா இறுதிப் போரில் 58ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த போது பாரதூர மனித உரிமை மீறல்கள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு காணப்படுகிறது.

இதனை அடிப்படையாக வைத்தே அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே, தாம் அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, விண்ணப்பிக்க போவதோ கிடையாது என இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சவேந்திர சில்வா குறித்த தகவல்களின் நம்பகதன்மையை ஆராய்ந்து தனது முடிவை அமெரிக்கா மீள் பரிசீலனை செய்யவேண்டும் என இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this video

Latest Offers