சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தி எதிர்வரும் பொதுத்தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
இதற்கான இணக்கம் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து இந்த முடிவை முன்னணியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று ஸ்ரீகொத்தாவில் இடம்பெற்ற கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் பங்கேற்கவில்லை.
ஏற்கனவே இதயம் சின்னத்தை சஜித் தரப்பு முன்வைத்தபோது அதற்கு ரணில் தரப்பில் இருந்து பாரிய எதிர்ப்பு வெளிக்காட்டப்பட்டது. இதனையடுத்தே தற்போது அன்னம் சின்னம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அன்னம் சின்னத்திலேயே 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசிய முன்னணியினர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.