எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் மாத்திரமே போட்டியிடுவார்கள் என்றால், அது ராஜபக்சவினரின் தேவையை நிறைவேற்றும் நடவடிக்கை என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதயபூர்வமாக நாங்கள் வேறு பயணத்தை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். இதயம் அற்ற தாமரை மொட்டுச் சின்னத்தினர் எப்படி கத்தினாலும் அவர்களின் மொட்டில் இருந்து இதழ்கள் ஒவ்வொன்றாக கழன்று விடும்.
இதனால், யானை சின்னத்தை வழங்காவிட்டால், நாங்கள் இதயம் சின்னத்தில் போட்டியிடுவோம் எனவும் பந்துலால் பண்டாரிகொட குறிப்பிட்டுள்ளார்.