ஆறு லட்சம் ரூபா பெறுமதியான நாற்காலியை கொள்வனவு செய்த வீரவங்ச

Report Print Steephen Steephen in அரசியல்
311Shares

இலங்கையில் நிதி தொடர்பான பிரச்சினையில்லை எனவும் நாட்டின் நிதி வீண் விரயம் மற்றும் கொள்ளையடிப்பது ஆகியவற்றை நிறுத்தினால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தெனியாய - புஸ்சேவெல, தங்கரங்ஹா ஹெல பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

நாட்டின் அமைச்சர்கள் மாறும் போது நாற்காலிகளை கூட மாற்றுக்கின்றனர். அமைச்சர் விமல் வீரவங்ச கொள்வனவு செய்துள்ள புதிய நாற்காலியின் விலை ஆறு லட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது.

நாட்டில் பணப் பிரச்சினையில்லை. பணத்தை வீண் விரயம் செய்வது, கொள்ளையடிப்பதை நிறுத்தினால், நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் 278 கோடி ரூபா செலவிட்டு வாகனங்களை கொள்வனவு செய்தாக கூறுகின்றனர். வாகன ஆசை என்ற நோய் இருக்கின்றது.

கடந்த அரசாங்கத்தின் அமைச்சர் பயன்படுத்திய வாகனத்தை புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பயன்படுத்துவதில்லை. அது அவர்களுக்கு பொருந்தாது.

இதற்கு எதிராக நாங்கள் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளோம். இப்படித்தான் நாட்டில் பணத்தை வீண் விரயம் செய்கின்றனர்.

வாகனங்களை மாத்திரமல்ல அமைச்சர் மாறும் போது அமைச்சரின் நாற்காலியையும் மாற்றுகின்றனர்.

இது சரியா?. விமல் வீரவங்ச உட்கார ஆறு லட்சம் ரூபாவுக்கு நாற்காலியை கொள்வனவு செய்துள்ளனர். மக்கள் இவற்றை நிராகரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.