அனைவரும் ஒற்றுமையாக, வலுவாக தேர்தலில் போட்டியிடுவோம்! ரஞ்சித் மத்துமபண்டார

Report Print Steephen Steephen in அரசியல்
26Shares

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் விதம் சம்பந்தமாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்து உள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக வலுவாக தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தையை மிகவும் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்தது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வலுவாக தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளோம்.

எப்படி போட்டியிடுவோம் என்பதை எதிர்காலத்தில் கூறுவோம். அத்துடன் தேர்தல் சின்னம் சம்பந்தமான சட்ட நடவடிக்கை முடிவடைந்த பின் அது குறித்து ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவோம்.

இரண்டு தரப்பினருக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில் செயற்படுவோம். அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய புதிய தீர்மானத்தை எடுப்போம்.

நாங்கள் பிரிந்து விடுவோம் என்ற நினைத்தவர்கள் தற்போது ஆச்சரியத்திற்கு உள்ளாவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.