மகிந்த - மைத்திரி ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு

Report Print Steephen Steephen in அரசியல்
77Shares

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான விசேட பேச்சுவார்த்தை எதிர்வரும் செவ்வாய் கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் பிற்பகல் அலரி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட உள்ளது. பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோரும் கலந்துக்கொள்ள உள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.