பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்! முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்
141Shares

அரசாங்கத்தின் சில அமைச்சர்களை தற்போது தொலைபேசியில் கூட தொடர்புக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இது மிகவும் வருத்தத்திற்குரிய நிலைமை எனவும் நாராஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாரதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அபயராம விகாரையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சில அமைச்சர்களிடம் இருக்கும் அதிகாரிகள் மற்றும் கை ஆட்களின் செயற்பாடுகள் காரணமாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் தொடர்பாக நாட்டு மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்.

இந்த பிரச்சினைகளை உடனடியாக தீர்க்காது போனால், கடந்த அரசாங்கம் எதிர்நோக்கியது போன்ற மக்கள் எதிர்ப்பை மிக விரைவில் தற்போதைய அரசாங்கம் எதிர்நோக்க நேரிடும்.

கஷ்டமான காலத்தில் போராட்ட பேரணியில் சென்றவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு, அந்த காலத்தில் கண்ணில் காணாத புதியவர்கள் தற்போது நாட்டின் பிரதானிகளை சுற்றி ஒன்றுகூட ஆரம்பித்துள்ளனர்.

அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட தமக்கு அரசாங்கத்திற்கு எதிரான மேடையில் ஏறவும் முடியும் என ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.