சவேந்திர சில்வாவின் தடைக்கு பின்னர் அமெரிக்காவும் இலங்கையும் முதல் சந்திப்பு

Report Print Ajith Ajith in அரசியல்
362Shares

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமி பேரா மற்றும் ஜோர்ஜ் ஹோல்டிங் ஆகியோர் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தனர்.

இதன்போது இருதரப்பு உறவை பலப்படுத்துவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையின் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க நேற்று தடை விதிக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்டு உயர்தரப்பினரும் மேற்கொண்ட முதல் சந்திப்பு இதுவாகும்.

சட்டவிரோத கொலைகள் உட்பட்ட போர்க்குற்றம் தொடர்பிலான நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்தமையை அடுத்தே சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்றைய சந்திப்பின்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை விருத்தி செய்துக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதை காங்கிரஸ் உறுப்பினர் பேரா மஹிந்த ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டினார்.

இவர் கலிபோர்னியாவின் 7வது காங்கிரஸ் மாவட்டத்தின் பிரதிநிதியாவார். இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது கருத்துரைக்கையில் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்காவின் முதலீட்டு திட்டங்கள் உறுதுணையாக இருக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

இதனை காங்கிரஸ் உறுப்பினர் ஹோல்டிங் ஏற்றுக்கொண்டார். இவர் வடகலிபோர்னியாவின் 2வது காங்கிரஸ் மாவட்ட உறுப்பினராவார்.

இந்த சந்திப்பின்போது அமெரிக்காவின் தூதுவர் எலைய்னா டெப்லிட்ஸூம் பங்கேற்றார். இதன்போது கருத்துரைத்த அவர் இலங்கையின் இறைமைக்கு அமெரிக்காவின் ஆதரவு உள்ளதாக குறிப்பிட்டார்.