மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க முடியாது: மோடியிடம் கூறிய மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்
222Shares

கடந்த அரசாங்கம் யோசனை முன் வைத்திருந்தது போல், மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கோ வேறு நாட்டுக்கோ வழங்கும் நோக்கம் இல்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அரச வளங்களை மற்றவர்களுக்கு வழங்குவதல்ல என தெரிவித்துள்ள பிரதமர், அரசாங்கம் தனியார் மயப்படுத்துவதை நிராகரிப்பதாக கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மத்தள விமான நிலையத்தை பாதுகாக்க போராட்டங்களில் ஈடுபட்டதால் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் சிறைக்கு செல்ல நேரிட்டது எனக் கூறியுள்ள மகிந்த ராஜபக்ச, மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய எண்ணியுள்ளதாக இந்திய பிரதமரிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது கருத்து வெளியிட்டுள்ள இந்திய பிரதமர் மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் மத்தள விமான நிலையத்தை மிக சிறந்த சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் புதிய விமான சேவைகளை அங்கு அழைத்து வர வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.