இராணுவ தளபதி சவேந்திர சில்வா தொடர்பில் அமெரிக்காவின் தீர்மானத்தை வரவேற்கும் சுமந்திரன்

Report Print Jeslin Jeslin in அரசியல்
205Shares

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா பயணத் தடை விதித்திருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளி பதிவில்,

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது.

இலங்கையில் பொறுப்புக்கூறல் சம்பந்தமான விடயத்தில் அரசாங்கம் காட்டி வந்த அசமந்த போக்கினாலே வந்த வினை இது.

யுத்த குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கம் தீர்க்கமான விசாரணைகளை நடத்த இடமளிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நாங்கள் கேட்ட வண்ணம் இருந்திருக்கின்றோம்.

இலங்கை அரசாங்கம் எமது கோரிக்கைகளை உதாசீனப்படுத்தியிருக்கின்றது. ஆகையினாலே இந்த முடிவை நாங்கள் வரவேற்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.