எனது நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் தடை ஏற்படுத்த கூடாது! ஜனாதிபதி கோட்டாபய

Report Print Vethu Vethu in அரசியல்
1119Shares

நிறைவேற்று அதிகாரங்களை மக்கள் சார்பாக மேற்கொள்ளும் போது நீதிமன்றம் தடை ஏற்படுத்தாமல் இருப்பது முக்கியமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீதியின் செயல்முறையை தாமதப்படுத்துவது நீதி மறுப்பு என்று கருதப்படுகிறமையினால், மக்களின் சட்டப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்க்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

இலங்கையின் சட்ட அமைப்பின் மேம்பாட்டிற்கு ஒரு சிறந்த தீர்வைக் கொண்டுவர நீதித்துறை, அரசு மற்றும் சட்டத்துறை என்பன இணைந்து செயல்பட வேண்டும்.

நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறையின் மூன்று தூண்கள் தெளிவாகப் பிரிக்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியம், இல்லையெனில் ஜனநாயகம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

நிர்வாகமும் சட்டமன்றமும் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பது என்பது ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கையாகும். சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்திற்கு நீதித்துறை தலையிடக் கூடாது என்பதும் முக்கியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.


you may like this video