வடகிழக்கில் தமிழ் மக்களின் வாக்குப் பலத்தை சிதறடிப்பதற்காக 32ஆவது கட்சி உதயம்

Report Print Yathu in அரசியல்

தமிழர்களின் வாக்குப் பலத்தை சிதறடிப்பதற்க்காக வடக்கு, கிழக்கின் 32ஆவது கட்சியாக மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி எனும் கட்சி அண்மையில் உதயமாகியுள்ளது.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அசியல் அபிலாசைகளுக்கும், சுயநிர்ணய உரிமைகளுக்காகவும் காலம் காலமாக பல்வேறு வகையான போராட்டங்களையும், அரசியல் ரீதியான அழுத்தங்களையும் முன்னெடுத்து வரும் பழம்பெரும் அரசியற்கட்சிகளால் செயற்படுத்த முடியாதவற்றைக் கூட நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான்களாக ஆங்காங்கே தோன்றி மறையும் சில கட்சிகள் தம்மால் சாதித்துவிட முடியும் எனக்கூறி மக்களை தம்வசப்படுத்த முனைவது வேடிக்கை தருகின்றது.

இனவிடுதலைக்கும், உரிமை பெறுவதற்குமாக கட்சிகள் உருவாகிய அல்லது உருவாக்கப்பட்ட காலங்களெல்லாம் கடந்து ஆளுக்கும், பேருக்கும் ஒவ்வோர் கட்சியை ஆரம்பித்து வைக்கலாம் என்ற அடிப்படையில் தற்போது வடக்கு, கிழக்கு மக்களையும் அவர்களது வாக்குகளையும் கூறுபோடும் இலக்கோடு புதுப்புது கட்சிகள் உதிப்பது சாதாரணமாகிவிட்டது.

1. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி

2. தமிழீழ விடுதலை இயக்கம்

3. தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம்

4. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

5. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF சுரேஸ் அணி)

6. தமிழர் விடுதலைக் கூட்டணி

7. ஈழவர் ஜனநாயக முன்னணி (EROS)

8. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் (ஐங்கரநேசன்)

9. தமிழ் மக்கள் கூட்டணி (க.வி.விக்னேஸ்வரன்)

10. தமிழ்த் தேசியக் கட்சி (சிறீகாந்தா, சிவாஜிலிங்கம்)

11. ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் (அனந்தி சசிதரன்)

12. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (வரதராஜப் பெருமாள்)

13. முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி (விஜயகாந்)

14. ஜனநாயக மக்கள் காங்கிரஸ் (பிரபா கணேசன்)

15. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (பிள்ளையான்)

16. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி (கருணா)

17. கிழக்கு தமிழர் கூட்டமைப்பு (கோபாலகிருஸ்ணன்)

18. கிழக்கு தமிழர் கூட்டணி (வியாழேந்திரன்)

19. கிழக்கு தமிழர் ஒன்றியம் (சிவநாதன்)

20. இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணி (கணேசமூர்த்தி)

21. ஜனநாயகப் போராளிகள் கட்சி

22. புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கட்சி

23. விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை

24. மறத்தமிழர் கட்சி (வேலப்பு அன்புமணி)

25. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP)

26. ஐக்கிய தேசியக் கட்சி (UNP)

27. சிறீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP)

28. மக்கள் விடுதலை முன்னணி (UNP)

29. பொதுஜன பெரமுன

30. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு (சந்திரகுமார்)

31. சிறீரெலோ (உதயராசா)

32. மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி

ஆகிய 32 கட்சிகளும், 16 இற்கும் மேற்பட்ட சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 48 கட்சிகள் தமிழர்களின் வாக்குகளை பிரித்து அவர்களின் பேரம் பேசும் சக்தியை உடைத்து தமிழர்களின் வாக்குகளை சிதறடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.