இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 120ஆக அதிகரித்துள்ளது.

60 கட்சிகள் வரை தமது விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் புதிய கட்சிகளின் விண்ணப்பங்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை வரை காலவரையறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சில கட்சிகளை விற்பனை செய்வது தொடர்பான விண்ணப்பங்களும் கிடைத்து வருகின்றன.

ஜனாதிபதி தேர்தலின்போது சில கட்சிகள் தமது கட்சியையும் சின்னத்தையும் பயன்படுத்துவதற்காக வேட்பாளர்களிடம் இருந்து 10 மில்லியன் ரூபாய் வரை பேரம் பேசின என்று தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படும் போது அதனை கட்டுப்படுத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை.

எனினும் உரிய நேர்முக பரீட்சைகள் நடத்தப்பட்டே கட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன. இதேவேளை அரசியல் கட்சிகளின் பதிவுகள் அதிகரிக்கும் போது தேர்தல் செலவுகள் அதிகரித்து செல்லும்.

ஏற்கனவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் பங்கேற்ற நிலையில் செலவுகள் அதிகரித்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.