காணாமல்போனோரின் உறவுகளுக்கு உதவி வழங்குவதாக பிரதமர் உறுதி!

Report Print Ajith Ajith in அரசியல்

காணாமல் போனோர் தொடர்பில் அவர்களின் குடும்பங்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்.

இந்த உறுதிமொழி 1987-1989ம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல்போனோர் தொடர்பில் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

இந்நிலையில்,நேற்று முன்தினம் காணாமல் போனோரின் உறவுகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இவர்கள் பிரதமர் அலுவலகத்துக்கு வந்தடைந்த போது பிரதமரின் அலுவலர்களை சந்தித்துள்ளனர்.

இதன்போது தமக்கு தொழில் மற்றும் கொடுப்பனவுகள் தரப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்கார்கள் அலரிமாளிகைக்குள் கோப்பி பானம் அருந்துவதற்காக அழைக்கப்பட்டனர்.

இதன் பின்னரே பிரதமர் அலுவலகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.