நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான திகதி பெப்ரவரி 18இல் அறிவிக்கப்படும்

Report Print Ajith Ajith in அரசியல்

நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி நள்ளிரவில் கலைக்கப்படும் என்று ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

19வது அரசியலமைப்பு திருத்தத்தின்படி ஜனாதிபதிக்கு இதற்கான அதிகாரம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய ஏப்ரல் இறுதியில் நாடாளுமன்ற தேர்தலை நடத்தமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தகவல் தொலைத்தொடர்புத்துறை ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இன்னும் நாடாளுமன்ற கலைப்புக்கான திகதி தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதியன்று அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, நாடாளுமன்ற கலைப்புக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதிக்கு ஏற்கனவே கிடைத்துள்ளது.

அவரும் பிரதமரும் கையொப்பமிடுவதே எஞ்சியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பெப்ரவரி 18 முதல் 20 வரையிலான திகதிகளில் தமது இறுதி அமர்வுகளை நடத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று நாட்களிலும் மத்திய வங்கியின் தடயவியல் அறிக்கை மற்றும் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விவகாரம் தொடர்பான விவாதம் நடத்தப்படும் என்றும் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.