நாடாளுமன்றத்தை கலைக்க இரண்டு நல்ல நேரங்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு மார்ச் மாத ஆரம்பத்தில் இரண்டு நல்ல நேரங்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் மாதம் 10 ஆம் திகதி இரண்டு தினங்களில் ஒன்றில் நாடாளுமன்றத்தை கலைக்க இந்த நல்ல நேரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மார்ச் மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்தலாம் என முன்னர் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் இது சம்பந்தமாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

தேர்தல் பிரசாரங்களை நடத்தும் காலங்களில் புத்தாண்டு வைபவங்கள் நடக்கும் என்பதால், அரசியல்வாதிகள் அவற்று உதவி செய்ய வேண்டும், இதனால் தேர்தல் செலவுகள் அதிகரிக்கும் அதனை தம்மால் ஈடு செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் ஏப்ரல் விடுமுறை 9 ஆம் திகதி ஆரம்பமாகி 19 ஆம் திகதி நிறைவடையும் எனவும் புத்தாண்டு விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்று பலர் கொழும்புக்கு வேலைக்கு திரும்பி வந்து விடுவார்கள் என்பதால், ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலில் வாக்களிக்க மீண்டும் ஊருக்கு செல்ல மாட்டார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெளியிடங்களில் இருந்து கொழும்பு வந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை சுமார் 7 லட்சம் எனவும் இது குறித்தும் கவனம் செலுத்தி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.