ஜனாதிபதிக்கு எனது அறிவையும் அனுபவத்தை பெற்றுக்கொடுப்பேன்: மைத்திரி

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல, தனது அறிவையும் அனுபவத்தையும் பெற்றுத் தருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அனைத்து கட்சிகளும் இணைந்து பொது முன்னணியாக போட்டியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.