கண்டி நகரில் காணப்படும் கடும் வாகன நெரிசலுக்கு தீர்வாக கண்டி ரயில் நிலையத்தை மையமாக கொண்டு இரண்டு நிலத்தடி ரயில் பாதைகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில் சேவைகள் ராஜாங்க அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி ரயில் நிலையத்திற்கு நேற்று கண்காணிப்பு பயணம் ஒன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த நிலத்தடி ரயில் பாதையை நிர்மாணிக்க ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் உதவியை பெற நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
நிலத்தடி ரயில் பாதைகளை அமைப்பதை தவிர கண்டி நகரில் வாகன நெரிசலுக்கு வேறு தீர்வில்லை.
பேராதனையில் இருந்து கண்டி வரை 5 மருத்துவமனைகள், 8 பாடசாலைகள் இருக்கின்றன. இதனால், பேராதனைக்கும் கண்டிக்கும் இடையிலான சில கிலோ மீற்றர் தொலை வரை கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நிலத்தடி ரயில் பாதைகளுக்கு மேலதிகமாக கண்டி - கொழும்பு நெடுஞ்சாலையின் இரண்டு பக்கங்களில் கடுகதி ரயில் பாதைகளை நிர்மாணிக்க திடடமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.