இப்போது சுகமா என்று நாங்கள் கேட்க மாட்டோம்!

Report Print Steephen Steephen in அரசியல்

அன்று பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் போது இப்போது சுகமா என்று கேட்ட தலைவர்கள் தற்போது அது பற்றி பேசுவதில்லை எனவும் அத்தியவசிய பொருட்கள் அடங்கிய பொதியை இலவசமாக தருவதாக கூறிய அரசாங்கம், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கிய போசாக்கு பொதியையும் நிறுத்தியுள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது பொருட்களின் விலை அதிகரித்த சந்தர்ப்பங்களில் அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்று குற்றம் சுமத்தினர். வாழ்க்கை செலவு அதிகரித்து மக்கள் வாழ கஷ்டப்படுவதாக கூறினார்கள். மேடைகளில் எம்மை திட்டினர். காய்கறி பைகளை காட்டினர். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிலைமை அப்படியே இருக்கின்றது.

ஆனால், நாங்கள் எவரிடமும் தற்போது சுகமா என கேட்க மாட்டோம்.விலைகள் குறைக்கப்பட்டிருந்தால், பொருட்களின் விலைகள் குறைய வேண்டும். நாங்கள் மக்களுக்கு வழங்கிய நிவாரணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்தும் ஏமாற்றும் விதத்தில் நடக்கின்றன. அரசாங்கத்தினால் அதனை கட்டுப்படுத்த முடியாது போயுள்ளது எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.