மைத்திரிக்கு சவால் விடும் ராஜாங்க அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருக்கும் நாட்டை நேசிக்கும் நபர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவத்தை பெற்று தேர்தலில் போட்டியிட முடியும் என மகாவலி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மகாவலி பீ. வலயத்தின் வெலிகந்தை பிரதேசத்தில் யானைகள் நுழைவதை தடுக்கும் வேலிகளை மறுசீரமைப்பது சம்பந்தமாக அவற்றை பார்வையிட சென்றிருந்த போது செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் பொலன்நறுவை மக்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பதை காட்ட அவர்கள் தனித்து போட்டியிட வேண்டும் என்ற சவாலை ஏற்றுக்கொண்டால், அது தார்மீகமானது.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோர் அதிகாரத்தில் இருக்கும் போது அவர்களை தோற்கடித்து எங்களால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது.

இதனால், நாங்கள் தனித்து போட்டியிடும் சவாலை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம் எனவும் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.