ஜனாதிபதி கோட்டாயவுக்கும் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்க வாய்ப்பு

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா பயணத் தடை விதிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிடுவதாக மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் திட்டமிடப்பட்ட ஒப்பந்தங்களை கைச்சாதிட வைக்கும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டிருக்கலாம் என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் தொடர்ந்தால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட மேலும் சில உயர் அதிகாரிகளுக்கும் பயணத் தடை விதிக்க கூடும் என அவர் கூறியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.