ஐ.தே.கட்சியின் பெரும்பான்மையினர் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளனர்: இம்தியாஸ்

Report Print Steephen Steephen in அரசியல்
44Shares

கட்சி தொடர்பான தீர்மானங்களை இயற்கையாக உருவான தலைவர்களே எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

மல்வத்து மஹா விகாரையில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையினர் தற்போது தெளிவான நிலைப்பாட்டில் உள்ளனர். அதற்கு கட்சி இடமளிக்க வேண்டும்.

எவராவது ஜனாதிபதி பதவி அல்லது பிரதமர் பதவிக்கு போட்டியிட்டால், அவருக்கு கட்சியின் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும்.

தலைமைத்துவத்தில் இருந்துகொண்டு அந்த பதவிகளுக்கு போட்டியிடாத நபர், கட்டுப்படுத்த முயற்சிப்பார் எனில் அது கேலிக்குரியது.

ஜனநாயக ரீதியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் குறிப்பிட்டுள்ளார்.