உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை: நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்

Report Print Yathu in அரசியல்

எங்களது உரிமைகளை நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வட்டக்கச்சியில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கிடையிலான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் எச்சந்தர்ப்பத்திலும் எங்களது உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது அதற்காக தொடர்ந்து போராடி வருகின்றோம். குறிப்பாக, எமது மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குக் கூட எந்த விதமான தீர்வுகளும் எட்டப்படவில்லை.

காணாமல் போனவர்கள் வருடக்கணக்கில் வீதிகளில் போராடி வருகின்றார்கள் அவர்களுக்கான நியாயம் கிடைக்கவில்லை. நீதி கிடைக்கவில்லை, அதுபோல இன்று நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான தீர்வுகள் கிடைக்கவில்லை.

சிறைகளில் இருக்கின்றவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இவ்வாறு எமது மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைக்கான தீர்வுகள் எட்டப்படவில்லை. எங்களது உரிமைகளை நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமுடியாது, என்று கூறியுள்ளார்.

குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சிப்பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், கட்சியின் செயற்பாட்டாளர்கள், கட்சியின் ஆதாரவாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.