ரிப்கான் பதியூதீன் பிணையில் விடுதலை

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனின் சகோதரரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ரிப்கான் பதியூதீனுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்திய அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ரிப்கான் பதியூதீன் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தலைமன்னர் பிரதேசத்தில் வேறு நபருக்கு சொந்தமான 40 காணியை போலி ஆவணம் தயாரித்து கைப்பற்றிய சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் ரிப்கான் பதியூதீன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.