யானை அல்லது அன்னம் சின்னத்தை சஜித்திற்கு வழங்கினால் ஐ.தே.கவிற்கு பாரிய சிக்கல்

Report Print Ajith Ajith in அரசியல்

யானை சின்னத்தை ஐக்கிய தேசியக்கட்சி கட்சி ஒன்றுக்கு வழங்கினால் தேர்தலின் பின்னர் மீண்டும் அந்த சின்னத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதற்கு உறுதிப்பாடு இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலின் பின்னர் குறித்த சின்னம் கட்சியுடன் பதிவுசெய்யப்படும் என்பதால் இந்த உறுதியை தமக்கு வழங்கமுடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலை யானை சின்னத்துக்கு மாத்திரமல்ல; அன்னம் சின்னத்துக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் லக்ஸ்மன் கிரியெல்ல உட்பட்ட சிரேஸ்ட உறுப்பினர்கள் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவினரை சந்தித்தபோதே இந்த கருத்துக்கள் வெளியாகின.

சஜித் பிரேமதாசவின் தலைமையிலான முன்னணிக்கு யானை சின்னத்தை வழங்கினால் ஏற்படப்போகும் சட்ட ஏற்பாடுகள் குறித்து வினவியபோதே தேர்தல்கள் ஆணைக்குழுவினர் இந்த கருத்துக்களை வெளியிட்டனர்.

இந்த நிலையில் யானை சின்னத்தையோ அல்லது அன்னம் சின்னத்தையோ சஜித் தரப்புக்கு வழங்கினால் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.