மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் முரளிதரனின் தம்பி பிரபாகரன்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் தமது சகோதரர் முத்தையா பிரபாகரன் போட்டியிட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தனது சகோதரர் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தான் தேர்தலில் போட்டியிடுவதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை எனவும் தனது சகோதரர் மலையக மக்களுக்காக தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைத்து முத்தையா முரளிதரன் அதிகமாக பேசப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து வடமாகாண ஆளுநர் நியமனத்தின் போதும் முரளிதரனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு அவர் அதனை மறுத்ததாக தகவல்கள் வெளிவந்திருந்தன.

இந்த நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் முரளிதரன் களமிறங்குவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது, எனினும் தற்போது முரளிதரனின் சகோதரர் பிரபாகரன் களமிறங்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.