ஜெனிவா செல்லும் அனந்தி சசிதரன்

Report Print Steephen Steephen in அரசியல்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதியான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துக்கொள்ள உள்ளார்.

காணாமல் போனவர்கள் பிரச்சினைகள் சம்பந்தமான விடயங்களை முன்வைப்பதற்காக அனந்தி சசிதரன் இந்த வாரம் ஜெனிவா புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் மத்திய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தகவல் வெளியிட்டுள்ளார்.