ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் இருந்து ஐக்கிய தேசியக்கட்சி பாடம் கற்க வேண்டும்! ஹிருனிக்கா

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதி தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானம் எடுப்பதில் காலதாமதம் செய்தமையை போன்று தற்போதும் நடந்துக்கொள்ள வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுக்கூட்டம் இன்று நடைபெறவிருந்தபோதும் அது நாளை 18ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் தமது அதிருப்தியை வெளியிட்டார்.

இந்தநிலையில் ஐக்கியதேசியக்கட்சி ஒன்றிணைந்து செயற்பட்டு தேர்தலின்போது தடுமாறும் நிலையை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஹிருனிக்கா செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக்கட்சி தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்க்காமல் விடுமானால் அது தேர்தல் தோல்விக்கு வழிவகுக்கும். அத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வர பல ஆண்டுகள் செல்லும் என்றும் ஹிருனிக்கா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியை பொறுத்தவரையில் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தகத்தில் இருந்து ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.

அவர்கள் 2015ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தபோதும் தமது வாக்காளர்களுக்கு நம்பிக்கையை வளர்த்து வந்தனர். தாம் அடுத்த பூரணை தினத்தில் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று அவர்கள் தமது ஆதரவாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினர்.

இந்த பழக்கத்தை ஐக்கிய தேசியக்கட்சியும் பின்தொடரவேண்டும். ஐக்கிய தேசியக்கட்சி தமது ஆதரவாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். முதலில் கதிரையில் போட்டியிட்ட அவர்கள் பின்னர் இலை சின்னத்தில் போட்டியிட்டனர். இறுதியில் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டனர்.

இதனை ஐக்கிய தேசிக்கட்சி உதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும். கடந்த பல வருடங்களாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளித்த பலர் அவர்களின் பிள்ளைகள் என்ற பலருக்கு இன்னும் தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட கட்சியின் ஆதரவாளர்களிடம் தாம் மன்னிப்பை கோருவதாகவும் ஹிருனிக்கா குறிப்பிட்டார்.