இராணுவ தளபதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தடையை கண்டிக்கும் திகாம்பரம்

Report Print Steephen Steephen in அரசியல்

இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

கினிகத்ஹேன மத்திய மகா வித்தியாலத்தில் நேற்று நடைபெற்ற விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் 30 ஆண்டுகள் நடைபெற்ற போரை முடிவுக்கு கொண்டு வர சவேந்திர சில்வா முக்கிய சேவையை செய்த இராணுவ அதிகாரி. இப்படியான அதிகாரிக்கு எதிராக இவ்வாறான தடைவிதிக்கப்பட்டுள்ளமை அநீதியானது எனவும் திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் எனக்கு பிரச்சினை இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் எந்த சின்னத்திலும் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குவதை பாராட்டுகிறேன். தோட்ட நிறுவனங்களின் நிபந்தனைகளுக்கு அடிப்பணியாது தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த அடிப்படை சம்பளத்தை வழங்க வேண்டும் எனவும் திகாம்பரம் மேலும் தெரிவித்துள்ளார்.