புதிய கூட்டணியின் தலைவர் மகிந்த - தவிசாளர் மைத்திரி

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் என பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தின் எதிரில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளோம். அதன் தலைவராக பிரதமர் மகிந்த ராஜபக்ச இருப்பார். தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செயலாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் தேசிய அமைப்பாளராக தயாசிறி ஜயசேகரவும் பதவி வகிப்பார்கள்

அத்துடன் தான் கடிதம் மூலம் விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு கட்சிகளின் உறுப்பினர்கள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்று இந்த விடயம் தொடர்பாக எழுத்து மூலம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளனர்.