யாழ். மாவட்ட மண்ணை பெருமிதத்துடன் நான் வணங்குகின்றேன். கல்வித்துறையில் என்னை ஒரு ஆளாக்கிய மாவட்டம் இது என யாழ். மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இன்றைய தினம் பதவியேற்ற கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
பதவியேற்பு நிகழ்வின் பின்னர் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க பண்புகளைக் கொண்டது யாழ். மாவட்டம். உலகத்திலேயே தமிழர் என்று சொன்னால் யாழ்ப்பாணம் என்று மறுபெயர் வழங்கக்கூடிய நிலையும் மிக அதிகளவான சிறப்பு கொண்டது யாழ்ப்பாண மண். இது நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்று.
நான் கனவிலும் நினைத்திராத ஒரு பணிக்காக கடவுள் என்னை இங்கு அனுப்பியிருக்கின்றார். யாழ். மாவட்ட குடும்பத்தின் ஒரு உறுப்பினராக என்னை கடவுள் இங்கு அனுப்பியிருப்பது பெருமைமையாக உள்ளது என தெரிவித்திருக்கின்றார்.