எம்.சீ.சீ நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

அமெரிக்காவின் மில்லேனியம் செல்லேன்ஜ் கோபெரேஷன் (MCC) உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடுவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தமது ஆரம்ப அறிக்கையை இன்று சமர்ப்பித்துள்ளது.

நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் லலித் ஸ்ரீ குணருவன் தலைமையிலான குழு இந்த அறிக்கையை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்ததாக ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த குழு கடந்த டிசம்பர் 19ஆம் திகதி அமைக்கப்பட்டது.

இந்த உடன்படிக்கைக்கு ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு ஆவணங்கள், அமைப்புகள், நபர்களுடன் நடத்திய கலந்துரையாடல்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு இந்த நிபுணர்கள் குழு ஆராய்ந்து வருவதுடன் நான்கு மாதங்களில் முழுமையான அறிக்கை தயாரிக்க உள்ளது. அதற்கு முன்னர் தயாரித்து அடிப்படை அறிக்கையே இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.