அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Report Print Ajith Ajith in அரசியல்

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த ஆணைக்குழுவுக்கு பல தரப்புக்கள் தமது முறைப்பாடுகளை செய்துள்ளன.

இந்த முறைப்பாடுகளை அடிப்படையாகக்கொண்டே இன்று விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. கொழும்பில் 11 பேர் கடத்தல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரணாகொட உட்பட பல கடற்படையினரும் இந்த ஆணைக்குழுவுக்கு தமது முறைப்பாடுகளை செய்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டிகேபி தசநாயக்க இன்று ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமாகி சாட்சியமளிக்கவுள்ளார்.

மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகளுக்கு நாளையும்,நாளை மறுதினமும் பிரசன்னமாகுமாறு ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.

குறித்த ஆணைக்குழுவுக்கு 263 தரப்புக்களால் 200க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.