தனிவழியில் அனுஷா! விரைவில் முடிவு அறிவிப்பு

Report Print Gokulan Gokulan in அரசியல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சந்திரசேகரின் புதல்வி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எமது செய்திப்பிரிவுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை நான் விடுத்திருந்தேன். அதனை தொடர்ந்து இன்று எங்களது முதலாவது செயற்குழு கூட்டம் தலவாக்கலையில் அமைந்துள்ள எமது பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது எமது நிலைப்பாடு, தற்போதைய மலையக அரசியல் நிலமைகள் தொடர்பில் மக்களின் நிலைப்பாடு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இன்றைய அரசியல் சூழ்நிலைகளுடன் எவ்வாறு நாம் எமது எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது. எம்மைப்பற்றிய எதிர் பிரசாரங்கள் வந்த வண்ணமிருக்கிறது.

இது எமது மலையக மக்கள் முன்னணியை ஸ்தாபித்த போராளிகளான மக்கள், இளைஞர்கள் யுவதிகள் என அனைவரும் என்னுடன் கைகோர்த்து இருக்கிறார்கள்.

ஆகவே தலைவரின் வழியில் தனித்துவம் மிக்க பயணத்தை தொடரும் நாம் எந்தவொரு அரசியல்வாதியின் தயவினாலோ, அல்லது எந்தவொரு அரசியல் கட்சியுடணும் கூட்டணி அமைத்தோ, ஒன்று சேர்ந்தோ தான் தேர்தலில் பயணிக்க வேண்டிய அவசியமில்லை.

எங்களுடைய தனித்துவத்தை நிலை நிறுத்தி தலைவர் சந்திரசேகரனின் தனித்துவ வழியில் பயணிக்கும் எங்களுடைய இறுதி தீர்மானத்தை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்தார்.