இணையத்தின் ஊடாக அரசாங்க மருத்துவ அறிக்கைகள்! ராஜாங்க அமைச்சர் உறுதி

Report Print Ajith Ajith in அரசியல்

அரசாங்கத்தின் மருத்துவ நிலையங்கள் யாவும் இணையத்தொடர்புகளுக்குள் கொண்டு வரப்படவுள்ளதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இதன் மூலம் மருத்துவ அறிக்கைகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்.

அரசாங்கம் மருத்துவ நிலையங்கள் இணையத்துக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் மருத்துவ அறிக்கை தேவைப்படும். ஒருவர் வைத்தியர் ஒருவருக்கான தமது விண்ணப்பத்தை இணையத்தின் மூலம் அனுப்ப வேண்டும்.

இதனையடுத்து மருத்துவ நிலையங்கள் விண்ணப்பத்தாரிகளுக்குக்கு உரிய நேரத்தையும், திகதியையும் அறிவிக்கும்.

இந்த நிலையில் விண்ணப்பத்தாரி தமக்கு தரப்பட்ட நேரத்தில் சென்று பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.

இதன் பின்னர் விண்ணப்பதாரிக்கு மருத்துவ அறிக்கை இணையத்தின் ஊடாகவே அனுப்பி வைக்கப்படும்.

இதேவேளை ஏற்கனவே இலகு ரக வாகனம், இரட்டை பயன் வாகனங்களுக்கான மருத்துவ அறிக்கையை வார நாட்களில் அரச வைத்தியசாலையில் பெறமுடியும்.

இவை வெளி நோயாளர் பிரிவின் ஊடாக விண்ணப்பத்தாரிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.