இலங்கையின் இறையாண்மைக்கு அமெரிக்காவால் அச்சுறுத்தல்! மங்களவும் ரணிலுமே காரணம்

Report Print Rakesh in அரசியல்
167Shares

இராணுவத் தளபதி லெப் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் பயணத் தடையானது எமது நாட்டின் கெளரவம் மற்றும் இறையாண்மைக்கு விடுக்கும் அச்சுறுத்தலாகும்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடந்த அரசில் வெளி விவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீரவும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவுமே காரணமாகும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

போர்க்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா நிறைவேற்றிய பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது.

அதற்கான ஆவணத்தில் மங்கள சமரவீர கைச்சாத்திட்டிருந்தார். ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமையவே மங்கள சமரவீர அதில் கைச்சாத்திட்டிருந்தார்.

அன்று மங்கள சமரவீர கைச்சாத்திட்டதன் பின் விளைவையே தற்போதும் நாங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.