ரணிலே பொருத்தமான தலைவர்! மகிந்த தரப்பு ஆதரவு

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே மிகவும் பொருத்தமான தலைவர் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான ரோஹித ஆபேகுணவர்தன இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஐக்கிய தேசியக் கட்சி சின்னங்களால் பிளவுப்பட்டுள்ளது. யானை, இதயமென சின்னங்களால் ஐக்கிய தேசியக் கட்சி பிளவுப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில், நாட்டை ஆட்சி செய்வதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருத்தமற்றவர். எனினும் ஐக்கியத் தேசியக் கட்சிக்கு அவரே பொருத்தமான தலைவர் எனவும் கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் முடிவுற்றதன் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தலைமைத்துவ பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால், ஐக்கிய தேசியக் கட்சி சஜித் மற்றும் ரணில் ஆதரவு தரப்பினர்கள் என இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. இந்த இரண்டு தரப்பினர்களும் இணைந்து செயற்படுவது குறித்து பேசி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக பிரதமர் மகிந்த தரப்பினரான ரோஹித ஆபேகுணவர்தன கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.