வடக்கு, கிழக்கிலும் போட்டியிடவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

Report Print Ajith Ajith in அரசியல்

பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடக்கு, கிழக்கிலும் போட்டியிடவுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இரண்டு கட்சிகளும் இணைந்த முன்னணி ஒவ்வொரு மாகாணங்களிலும் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் முடிவாகவில்லை.

எனினும் பெரும்பாலான மாகாணங்களில் இணைந்து போட்டியிடுவது என்றே முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தயாசிறி ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இந்த இரண்டு கட்சிகளும் இணைந்த 'ஸ்ரீலங்கா நிதாஹஸ் பொதுஜன சந்தானய' தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டது. மொட்டு இதன் சின்னமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த முன்னணியின் தலைவராக மஹிந்த ராஜபக்சவும் தவிசாளராக மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பசில் ராஜபக்ச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.