நான் நிம்மதியாக இருக்க திட்டமிட்டேன்! - மைத்திரி

Report Print Jeslin Jeslin in அரசியல்

நான் எனது எதிர்காலத்தை நிம்மதியாக வாழ்வதற்கே திட்டமிட்டிருந்தேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே நான் மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

நான் 26 வருடங்கள் நாடாளுமன்றத்திலும் 5 வருடங்கள் ஜனாதிபதியாகவும் கடமையாற்றிய நிலையில் எனது வாழ்நாளின் இதன் பின்னரான காலத்தை நிம்மதியாக வாழ திட்டமிட்டிருந்தேன்.

இந்நிலையில் கட்சியின் உறுப்பினர் மீண்டும் தேர்தலில் களமிறங்குமாறு வேண்டி கொண்டதன் அடிப்படையிலேயே அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தேர்தலில் களமிறங்குகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.