சந்திரிக்காவிற்கு வலை வீசும் மைத்திரி அணி! தீவிர முயற்சியில் தயாசிறி

Report Print Kanmani in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணையவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இவர் எதிர்காலத்தில் தனது அரசியல் பயணத்தில் பசிலின் கூட்டணியில் இணைந்து செயற்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தான் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும், அவர் இந்த விடயத்தை பரிசீலிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கம் மீண்டும் திரும்புவதை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

72வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான அழைப்பை ஏற்றிருந்த சந்திரிகா குமாரதுங்க சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நட்புறவாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.