அன்னம் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தி

Report Print Ajith Ajith in அரசியல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை முன்னிலைப்படுத்தும் கட்சிகள் ஐக்கிய தேசிய சக்தி என்ற கட்சியின் கீழ் போட்டியிடவுள்ளன.

இந்த கட்சிக்கு சின்னமாக அன்னம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவி கருணாநாயக்க, லச்மன் கிரியெல்ல, கபீர் ஹாசிம், மங்கள சமரவீர மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவின் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த முடிவு நாளை ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து விரைவில் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து ஐக்கிய தேசிய சக்தியின் சின்னமாக அன்னத்தை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தியோகபூர்வமாக கோரப்பட்டுள்ளதாக நவின் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சி ஏற்கனவே மூன்று ஜனாதிபதி தேர்தல்களில் அன்னம் சின்னத்தில் போட்டியிட்டது.

எனினும் பொதுத்தேர்தல் ஒன்றில் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவது இதுவே முதல் தடவையாகும்.