வாகனங்கள் கொள்வனவு தொடர்பிலான பிரசாரத்துக்கு எதிராக குற்றப்புலனாய்வு விசாரணை அவசியம்!

Report Print Ajith Ajith in அரசியல்

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் தாம் வாகனங்களை கொள்வனவு செய்ததாக சில ஊடகங்கள் செய்த பிரசாரத்துக்கு எதிராக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

குறித்த ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை போன்று தாம் எவ்வித வாகனங்களையும் கொள்வனவு செய்யவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் மஹிந்த அமரவீர இது தொடர்பில் தெரிவித்துள்ள தகவலில் நல்லாட்சி அரசாங்க காலத்தில் தாம் 400 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதுபோன்று முன்னாள் அமைச்சர்கள் ரஞ்சித் மத்துமபண்டார, கயந்த கருணாதிலக்க, லக்கி ஜெயவர்த்தன, அலவத்துவல, மனோ கணேசன், ரஞ்சித் அலுவிஹார,ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் தொடர்பிலேயே ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இதேவேளை இந்த தகவலை நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தாம் குறித்த வாகனங்கள் அமைச்சுக்களுக்கே கொள்வனவு செய்யப்பட்டதாக தாம் தெரிவித்ததாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.