சவேந்திர சில்வாவின் பயணத்தடை ஆத்திரமூட்டும் செயல்! நாமல் ராஜபக்ச ஆவேசம்

Report Print Ajith Ajith in அரசியல்

இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் மீது பயணத்தடை விதித்ததன் மூலம் அமெரிக்கா ஆத்திரம் மூட்டியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த செயல் இருதரப்பு உறவை பாதிக்கும் என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

சவேந்திர சில்வா மீது அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டு மோசமான மற்றும் அடிப்படையற்றது என்றும் நாமல் ராஜபக்ச தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் இலங்கையின் நட்பு நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று நாமல் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை விதித்தமையை அடுத்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணையில் இருந்து விலகிக்கொள்ளப்போவதாக அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.